மேலும் செய்திகள்
குழந்தைகள் அறிவியல் மாநாடு
27-Jan-2025
கூடலுார்; கூடலுாரி நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 130 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.கூடலுார் புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் மணிவாசகம் வரவேற்றார். மாநாட்டுக்கு, மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் அறிவியல் மாநாடு தொடங்கியது. அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரிஷி சரவணன் மேலிட பார்வையாளராக பங்கேற்றார். கூடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் சார்பில்,130 ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.'இதில் தேர்வு செய்யப்படும் கட்டுரை, மண்டல அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பாளர்கள்' என, தெரிவித்தனர். அரசு கல்லுாரி முதல்வர் சுபாஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Jan-2025