மேலும் செய்திகள்
ஆதித்யாஸ் விவேகானந்தா மழலையர் பள்ளி திறப்பு
17-Jun-2025
ஊட்டி; ஊட்டியில் உள்ள கிரசன்ட் மழலையர் பள்ளியில், உலக சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டது.கடந்த,1550ம் ஆண்டு ஐரோப்பாவில் சாக்லேட் அறிமுகமானது. உலக சாக்லேட் தினம் ஆண்தோறும், ஜூலை,7ல் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாக சாக்லேட் உள்ளது.'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் இடுபொருட்களுடன் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. ஊட்டியில், 200 வகை சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள கிரசன்ட் மழலையர் பள்ளியில், உலக சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டது. அதில், 50 வகை சாக்லேட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, பெற்றோர், மழலையருக்கு பரிமாறப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் உமர்பரூக், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
17-Jun-2025