மேலும் செய்திகள்
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
23-Nov-2024
குன்னுார்; குன்னுார் மேல் வண்ணாரபேட்டையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த கிறிஸ்துவ அரசர் சிற்றாலய ஆண்டுவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 9 நாட்கள் நவநாள் திருப்பலி நடந்தது. திருவிழா தினத்தில் தேர்பவனி, புனித அந்தோணியார் திருத்தலத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வண்ணார பேட்டை கிறிஸ்து அரசர் சிற்றாலயத்தை அடைந்தது. அங்கு, புனித அந்தோணியார் திருத்தல பங்குதந்தை யூஜின் நியூமன் ஜோசப், உதவி பங்கு தந்தை ஜேக்கப் ஆகியோரின் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மறையுரை, அன்பின் விருந்து ஆகியவற்றுடன் விழா நிறைவு பெற்றது.
23-Nov-2024