உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துாய்மை இயக்க உறுதிமொழி

துாய்மை இயக்க உறுதிமொழி

ஊட்டி; ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு அலுவலர்கள் துாய்மை இயக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாநிலம் முழுவதும் 'துாய்மை மிஷின்-2.0' திட்டத்தின் கீழ், துாய்மை செய்யும் பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட கூடுதல்கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் லட்சுமிபவியா தலைமை வகித்து, துாய்மை இயக்க உறுதிமொழி வாசிக்க அரசு அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாயிலாக, துாய்மை பணி மேற்கொண்டு, 'இ-வேஸ்ட் ' பயன்படுத்த இயலாத பொருட்கள் மற்றும் பேப்பர் ஆகியவற்றை கழிவு செய்வதற்காக, அந்தந்த பகுதிகளில் சேகரித்து வைத்ததை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பொருட்களை கழிவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை