உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகரை சூழ்ந்த மேக மூட்டம்; வாகனங்களை இயக்க சிரமம்

நகரை சூழ்ந்த மேக மூட்டம்; வாகனங்களை இயக்க சிரமம்

கூடலுார்; கூடலுார் நகரில் மேக மூட்டம் சூழ்ந்ததால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டனர்.கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. சூரிய ஒளியை எப்போதாவது சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிகிறது. மழையை தொடர்ந்து, அவ்வப்போது ஏற்படும் மேக மூட்டங்களால், மலைப்பாதைகளில் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கூடலூர் நகரில் நேற்று காலை முதல் சில மணி நேரம் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து போலீசார், வாகனங்களை மெதுவாகவும் இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி