மேலும் செய்திகள்
மலை பாதை பயணம்; முன்னெச்சரிக்கை அவசியம்
16-Oct-2024
கோத்தகிரி ; 'கோத்தகிரி பகுதியில், மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், விபத்துகளை தவிர்க்க, வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரு நாட்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் மேகமூட்டமான காலநிலையில் தொடர்ந்து மழை பெய்தது. பகல் நேரத்தில் வானம் சற்று தெளிவாக காணப்பட்டது.கடும் குளிர் நிலவிய நிலையில், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உட்பட, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாயினர். தோட்ட பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது.அரசு பஸ்கள் உட்பட, வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கு உதவியுடன் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இருந்து, நகரப்பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. போலீசார் கூறுகையில், 'மேகமூட்டமான காலநிலை நீடிப்பதால், மேட்டுப்பாளையம் மற்றும் சோலுார் மட்டம் மலைப்பாதையில், விபத்துகள் நடப்பதை தவிர்க்க, வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்,' என்றனர்.
16-Oct-2024