கூடலுாரில் வாகன விபத்து: கல்லுாரி மாணவர் காயம்
கூடலுார்: கூடலுாரி புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்,20. இவர் கூடலுார் அரசு கல்லுாரியில் பி.காம்., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை, 11:30 கோழிக்கோடு சாலை வழியாக பைக்கில், கூடலுார் நோக்கி வந்தார். நந்தட்டி அருகே, சேரம்பாடி நோக்கி செல்லும் அரசு பஸ்சும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், பைக்கில் பயணம் செய்த மாணவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, போக்குவரத்து சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.