மேலும் செய்திகள்
ரத்தம் இருப்பில்... உயிர்கள் பாதுகாப்பில்!
01-Oct-2026
பந்தலூர்: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் நடந்த ரத்த தான முகாமில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் எருமாடு கனிவு பெயின் மற்றும் பாலியேட்டிவ் கேர், சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து, ரத்த தான முகாமினை நடத்தினார்கள். முகாமில், பாலியேட்டிவ் கேர் தலைவர் ரஷித்ஹாஜி துவக்கி வைத்து பேசினார். கல்லூரி வளாக மேலாளர் உம்மர், என். எஸ். எஸ். திட்ட அலுவலர் முபஷீர் ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். தொடர்ந்து, கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மதரஸா மாணவர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். ரத்த வங்கி செவிலியர் பீனா ரத்த தானம் குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, ரத்த தானம் கொடுக்கும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
01-Oct-2026