பள்ளி மாணவிகளுக்கு போட்டி
கூடலுார்: கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் விளையாட்டு துறை இணைந்து, 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகளுக்கு இடையான எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. அதில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் மூன்று இடங்களை, ஸ்ரீமதுரை, பந்தலுார், கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.