உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளர்ச்சி பணிகளில் முறைகேடு புகார்; ஆய்வு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தல்

வளர்ச்சி பணிகளில் முறைகேடு புகார்; ஆய்வு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தல்

குன்னுார்; 'குன்னுார் ஜெகதளா பேரூராட்சியில், நடந்த பணிகளில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, கவுன்சிலர்கள் சஞ்சய், சஜீவன், திலிப், ஏஞ்சலின், ஆஷா, பிரமிளா, ராஜலட்சுமி, சுகுணாம்பாள் ஆகியோர், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா; ஜெகதளா செயல் அலுவலருக்கு அளித்துள்ள மனு:குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சியில், 'வார்டு, 13ல், கழிவு நீர் கால்வாயுடன் கூடிய நடைபாதைக்கு, 15வது திட்ட நிதியில், 10 லட்சம் ரூபாய் ; வார்டு 6ல் அரக்காடு பகுதியில் எஸ்.ஏ.டி.பி., குடிநீர் குழாய் அமைக்க, 18 லட்சம் ரூபாய் ; வார்டு 4ல், 15வது திட்ட நிதியில், குடிநீர் குழாய் அழைக்க, 3.5 லட்சம் ரூபாய் ; வார்டு 11 உதயம் நகரில், நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவருக்கு, 7 லட்சம் ரூபாய் ; வார்டு எண் 5ல், ஜெகதளா ஹெத்தைகல் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க, 4 லட்சம் ரூபாய்; வார்டு 7ல், ஜெகதளா ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., நிதியில், 10 லட்சம் ரூபாய் ; வார்டு 8ல், புதிய ஜி.எல்.ஆர்., அமைக்க, 3.90 லட்சம் ரூபாய்,' என நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, அரசு ஒதுக்கிய தொகையை நிறுத்தி வைப்பதுடன், தரமான பணிகளை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை