மேலும் செய்திகள்
மழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
07-Aug-2025
கோத்தகிரி, ; கோத்தகிரி பகுதியில் பூண்டு அறுவடை நடந்து வந்தாலும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நடப்பு போகத்தில், அதிக பரப்பளவில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். பெரும்பாலான தோட்டங்களில், பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், விலை குறைந்துள்ளது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. பூண்டு விதை, உரம், பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்டவற்றின் விலையேற்றம், இருமடங்கு கூலி உயர்வு, விற்பனை செய்வதற்கான லாரி வாடகை, மண்டி கமிஷன் போன்ற கூடுதல் செலவினங்களை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில், எடப்பள்ளி பகுதியில் பூண்டு ஏல மையம் திறக்க பட்டிருப்பது, விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. எனினும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து, மழை பெய்யும் பட்சத்தில், தயாரான பூண்டு அழுகிவிடும் என்பதால், அவசரகதியில் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
07-Aug-2025