உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜனதா தளம் அலுவலகத்தில் காங்., சொத்து மீட்பு குழு; பாதுகாப்பு அளிக்க போலீசில் புகார்

ஜனதா தளம் அலுவலகத்தில் காங்., சொத்து மீட்பு குழு; பாதுகாப்பு அளிக்க போலீசில் புகார்

ஊட்டி: காங்., சொத்துக்களை மீட்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் தங்கபாலு தலைமையில், ஊட்டியில் ஆய்வு நடந்தது. அதன் ஒரு பகுதியாக, லோயர் பஜாரில் உள்ள ஜனதா தளம் கட்சி அலுவலகத்துக்கு குழுவினர் வந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஜனதாதளம் ஊட்டி நகர தலைவர் முஸ்தபா ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். முஸ்தபா கூறுகையில், ''முன்னாள் காங்., தலைவர் தங்கபாலு தலைமையில், பலர் எங்கள் கட்சி அலுவலகத்தில் நுழைந்து பார்வையிட்டனர். இதனால், எங்கள் அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி, குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார். தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில்,'' மாநிலம் முழுவதும் காங்., சொத்துக்களின் நிலை குறித்து அறிந்து, அதனை மீட்டு, கட்சிக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சில பகுதிகளில் ஆய்வு செய்தோம். '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ