கோத்தகிரியில் காங்., கட்சியினர் பாதயாத்திரை
கோத்தகிரி : கோத்தகிரி வட்டார காங்., சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது. கோத்தகிரி வட்டார காங்., கட்சி சார்பில், காந்தியடிகளின் அஹிம்சை வழி மற்றும் அவரது தேசப்பற்றை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பாதயாத்திரை நடந்தது. வட்டாரத் தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ராஜூ, கமலா சீராளன், வேலுசாமி மற்றும் கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோத்தகிரி அரவேனு பஜாரில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின், கட்சியினர், ஜக்கனாரை வரை பாதயாத்திரை சென்றனர்.