உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அரசியலமைப்பு தினம்: தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழி

 அரசியலமைப்பு தினம்: தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழி

குன்னுார்: குன்னுார் தீயணைப்பு துறை அலுவலகத்தில், அரசியல் அமைப்பு தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த,1949ல் நவ., 26ல் இந்திய மக்களுக்கு சேர்க்கும் அரசியலமைப்பு சபை கொண்டுவரப்பட்டு அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. கடந்த, 2015 ல் இருந்து ஆண்டுதோறும் நவ., 26ல் அரசியலமைப்பு தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்கப் படுகிறது. நேற்று குன்னுார் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், நாட்டின் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி நிலைய அலுவலர் குமார் தலைமையில் எடுத்து கொள்ளப்பட்டது. அலுவலர் சுப்ரமணி உறுதிமொழியை வாசிக்க, தீயணைப்பு வீரர்கள் உறுதி மொழியை எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்