உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் தொடர் மழை; மிதி படகு சவாரி நிறுத்தம்

ஊட்டியில் தொடர் மழை; மிதி படகு சவாரி நிறுத்தம்

ஊட்டி : ஊட்டியில் சாரல் மழை தொடர்ந்ததால் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுங்குளிர் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தென்பட்டது. நேற்று காலை முதல் ஊட்டியில் மேக மூட்டத்துக்கு இடையே சாரல் மழை தொடர்ந்தது. ஊட்டி படகு இல்லத்திற்கு, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் கணிசமாக வந்திருந்தனர். சுற்றுலா பயணியருக்காக, 'மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு,' என, நுாற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகிறது. சாரல் மழை தொடர்ந்ததால் மிதி படகு சவாரி மட்டும் நிறுத்தப்பட்டது. பிற படகுகள் வழக்கம் போல் இயங்கின. மாலையில் படகு இல்லத்தில் பயணியர் கூட்டம் வெகுவாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி