உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடர் மழை: வெள்ள காடாக மாறிய பந்தலுார்

தொடர் மழை: வெள்ள காடாக மாறிய பந்தலுார்

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் பெய்த கனமழையால், சாலைகள் மற்றும் விவசாய தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பந்தலூர் பஜார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில், மழைநீர் வடிந்து ஓட போதிய வடிகால் வசதிகள் இல்லாத நிலையில், ஒரு மணி நேரம் தொடர் மழை பெய்தால் சாலை மற்றும் விவசாய தோட்டங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. நேற்று முன்தினம் மாலை திடீரென பெய்த கனமழை காரணமாக, பந்தலுார் பஜார் உள்ள சாலைகள் மற்றும் சாலையை ஒட்டிய கடைகளில் மழை வெள்ளம் புகுந்தது. கால்வாய்களில் மழை வெள்ளம் வழிந்தோட போதிய வசதி இல்லாத நிலையில், மாணவர்கள்மற்றும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாதநிலையில் மழை வெள்ளம் சாலைகளில் நிறைந்தது. அதேபோல், ஹட்டிவயல், செம்மண்வயல் பகுதிகளில், விவசாய தோட்டங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நேந்திரன் வாழை தோட்டங்கள் பாதிக்கப்பட்டதுடன், எஸ்டேட் தொழிலாளர்கள் இதனை ஒட்டிய சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். தொடர்ச்சியாக, மழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வழிந்தோட போதிய வடிவால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ