உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியாருக்கு சொந்தமான இடத்தில் தடுப்பு சுவர் கட்டியதால் சர்ச்சை

தனியாருக்கு சொந்தமான இடத்தில் தடுப்பு சுவர் கட்டியதால் சர்ச்சை

பந்தலுார் : பந்தலுார் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பந்தலுார் அருகே கையுன்னி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம், பெந்தகோஸ்தே சர்ச் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு ஏற்கனவே சேரங்கோடு ஊராட்சி மூலம் சிமென்ட் நடைபாதை அமைத்து தரப்பட்டு உள்ளது. இந்நிலையில், சர்ச் செல்லும் நடைபாதையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சேரங்கோடு ஊராட்சி பொது நிதி மூலம், 4- லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. 'தனியாருக்கு செந்தமான இடங்களுக்கு தடுப்பு சுவர் அமைக்க முடியாது,' என, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், அந்த உத்தரவை மீறும் செயல் நடந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தடுப்பு சுவருக்கு ஊராட்சி தலைவர் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் லில்லி கூறுகையில், ''இது தனி நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பணி என்பதால், இந்த தொகை வழங்கப்படாமல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நிதி வழங்கப்பட மாட்டாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ