உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குன்னுார் மாணவி சாதனை

 குன்னுார் மாணவி சாதனை

குன்னுார்: குன்னுார் அருகே வெலிங்டன் ராணுவ பொது பள்ளியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவி ஷ்ரத்தா. கடந்த மாதம், 26, 27 தேதிகளில் டில்லியில் ராணுவ கல்வி நல சங்கம் சார்பில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில், தென்மண்டல பிரிவில் இருந்து பங்கேற்று, தேசியளவில் இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடன் சென்ற யோகா ஆசிரியை பீனா சுரேஷ்குமார் கூறுகையில், ''14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்ட ஷ்ரத்தா, ஐந்து சுற்றுகள் கொண்ட ரவுண்ட்-ராபின் வடிவத்தில் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து, பள்ளிக்கும், நீலகிரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்,'' என்றார். முதல்வர் ஹேமாபிராங்க், உதவி முதல்வர் ஸ்வேதா தீட்சித், உடற்கல்வி ஆசிரியர் பிரசாத் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி