குன்னுார் மலை ரயில்வே உணவகத்தில் கூட்டம்
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் நடைமுறையை ரத்து செய்வது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு கடையடைப்பு நடந்தது. இதற்கு சுற்றுலா வாகனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள், முழு கடையடைப்பு குறித்த அறிந்து, அங்குள்ள கேன்டீனில் உணவு மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை வாங்க முற்றுகையிட்டனர். ஆவின் பூத் தவிர வேறு எந்த கடைகளும் இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டனர்.