மேலும் செய்திகள்
மரத்தை அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியர்கள்
28-Sep-2026
குன்னுார்: குன்னுார் வண்டிச்சோலை பாரஸ்ட்டேல் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த மழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் காற்று மட்டும் வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியளவில் வண்டிச்சோலை -பாரஸ்ட் டேல் சாலையில், காற்றின் வேகம் காரணமாக மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, குன்னுார் தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
28-Sep-2026