உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆபத்தான பாலம்; தடுப்பு அமைத்தால் நலம்

 ஆபத்தான பாலம்; தடுப்பு அமைத்தால் நலம்

பந்தலுார்: 'பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில், ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை ஒட்டி தடுப்பு அமைக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. பந்தலுாரில் இருந்து கூவமூலா, அத்திக்குன்னா செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருவதுடன், மீதமுள்ள நேரங்களில் ஆட்டோக்கள் பயணிகளின், போக்குவரத்து தேவையை நிறைவு செய்து வருகின்றன. இந்நிலையில், 'எம்.ஜி.ஆர்.,நகர், கூவமூலா ஆறு மற்றும் கூவமூலா எல்லை,' என, மூன்று இடங்களில், சிறு பாலங்கள் உடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கூவமூலா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இரண்டு பக்கங்களிலும், தடுப்புகள் உடைந்து, மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதில், மண் சரிவை பாதுகாக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை மூலம் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்போது மண் மூட்டைகளும் சரிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த சாலையில் வாகன ஆபத்துகள் ஏற்படும் முன்னர், சேதமான பகுதிகளில் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ