உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை ஓரத்தில் ஆபத்தான மரங்கள் -அகற்றினால் மழை காலத்தில் அச்சமில்லை

சாலை ஓரத்தில் ஆபத்தான மரங்கள் -அகற்றினால் மழை காலத்தில் அச்சமில்லை

பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலமன்னா பகுதியில் சாலையின் இரண்டு பகுதியிலும், ஆபத்தான நிலையில் உள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள கற்பூர மரங்களை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அனுமதி உடன் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பந்தலுாரில் இருந்து கொளப்பள்ளி அருகே, ஏலமன்னா என்ற இடத்தில் சாலையில் இரண்டு பக்கங்களிலும் விழும் வகையில், கற்பூர மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பகல் நேரத்தில் இதே பகுதியில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களால் பாதிப்பு ஏற்படும் முன்னர், இவற்றை வெட்டி அகற்ற வேண் டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி