உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பந்தலுார்;பந்தலுார் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை, 5:30 மணி முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி கோவில் மேல் சாந்தி முரளி, கோவில் மேலாளர் சந்தியா தலைமையில் நடந்தது.அதில், பந்தலுார் தாலுகாவை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த, பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு மந்திரங்கள் முழங்க திதிகொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து ஆற்றில் நீராடி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ