உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரைபிள் ரேஞ்ச் பகுதியில் மீண்டும் குப்பை; விரைவில் போராட்டம் நடத்த முடிவு

ரைபிள் ரேஞ்ச் பகுதியில் மீண்டும் குப்பை; விரைவில் போராட்டம் நடத்த முடிவு

கோத்தகிரி,; கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட ரைபிள் ரேஞ்ச் பகுதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது.கோத்தகிரி நகர மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக, ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம் விளங்குகிறது. நகரின் பாதியளவு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குடியிருப்புகள், கட்டுமானம், புதிய சாலை என சதுப்பு நிலம் சமீப காலமாக சுருங்கி வருகிறது.மேலும், கட்டுமான கழிவுகள் உட்பட, குப்பைகள் இங்கு கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆசிரியர் ராஜூ, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது தொடர்கிறது. சதுப்பு நிலைகளை பாதுகாக்க, சட்டம் இருந்தும், அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இது குறித்து, வருவாய் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசு துறையினர் சமூக விரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது, காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாத பட்சத்தில், சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை