பூங்காவில் அலங்கார வடிமைப்பு; சுற்றுலா பயணிகள் வியப்பு
குன்னுார் : குன்னுார் காட்டேரி பூங்காவில் சாம்பிராணி செடிகளால் அலங்கார வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குன்னுாரில் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவர பூங்காவில் நடைபாதை ஓரங்களில் சாம்பிராணி செடிகளால் அலங்கார வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, சால்வியா பூக்கள் மலர்ந்துள்ள இடங்களில் இந்த வடிவமைப்புகள் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. எனினும், நுழைவு கட்டணம் உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. எனவே, நுழைவு கட்டணம் உயர்வை குறைக்க வேண்டும்.