உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழுதடைந்த அரசு பஸ்கள் பலிகடாவாகும் ஊழியர்கள்

பழுதடைந்த அரசு பஸ்கள் பலிகடாவாகும் ஊழியர்கள்

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசு பஸ்கள் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளன. இந்த பஸ்கள் பெரும்பாலும் ஆங்கங்கே பழுதடைந்து நின்று விடுகின்றன. மழை காலங்களில் பஸ்களுக்குள் மழை நீர் புகுந்து, பயணிகள் குடை பிடித்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டிய போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், தீர்வு காணாமல், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'நீலகிரிக்கு புதிய பஸ்கள் வழங்காமல் பழைய பஸ்களை புதுப்பித்து இயக்கப்படுகிறது. அடிக்கடி பஸ்கள் பழுதடைந்து நிற்கும் போது, உடனடியாக கீழ்மட்ட நிலையில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதை உயர் அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பணிகள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.மக்கள் கூறுகையில்,'அரசு, நல்ல பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல், ஊழியர்களை பழிவாங்குவதை தவிர்த்து, கோடை சீசனுக்குள் புதிய பஸ்களை மலை பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை