ஊட்டி மலை ரயிலில் டில்லி கவர்னர் பயணம்
குன்னுார்; டில்லி கவர்னர் வினைகுமார் சக்சேனா ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தார்.நீலகிரி மாவட்டத்திற்கு தனிப்பட்ட முறையில், கடந்த, 28ல் வருகை தந்த, டில்லி கவர்னர் வினைகுமார் சக்சேனா, ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.சூட்டிங் மட்டம், முதுமலை உட்பட பழங்குடியின கிராமங்களுக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் சாலை மார்க்கமாக, குன்னுார் வந்தார்.அவரை குன்னுார் தாசில்தார் ஜவகர் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர். ஹைபீல்டு பகுதியில் தனியார் ஓட்டலில் உணவு உட்கொண்ட அவர், மாலை 4:10 மணிக்கு குன்னுார் மலை ரயிலில் புறப்பட்டு ஊட்டியை சென்றடைந்தார்.தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்றார். நேற்று காலை காரில் கோவை விமான நிலையம் சென்றார்.