மேலும் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
24-Jun-2026
குன்னுார்: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆல்தொரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேஷ், குடோன் சங்க செயலாளர் ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 'டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியர் மாநில நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொண்ட தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
24-Jun-2026