மேலும் செய்திகள்
தெப்பக்காடு - மசினகுடி சாலையில் மறியல்
30-Jan-2025
காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
24-Jan-2025
கூடலுார்: ஊட்டியில் செயல்பட்ட, முதுமலை மசினகுடி வனக்கோட்ட துணை இயக்குனர் அலுவலகம் மசினகுடிக்கு மாற்றப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார், ஊட்டி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்கள் செயல்பட்டு வந்தன. அதில், வடக்கு வனக்கோட்டத்தில் இருந்த ஊட்டி, குன்னுார், கோத்தகிரி வனச்சரகங்கள் ஊட்டி தெற்கு வனக்கோட்டத்தில் இணைக்கப்பட்டு, நீலகிரி வன கோட்டமாக மாற்றப்பட்டன. மேலும், ஊட்டி வடக்கு வனக்கோட்டத்தில் இருந்த சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகங்கள் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச் சரகத்துடன் இணைக்கப்பட்டு, முதுமலை மசினகுடி வன கோட்டமாக மாற்றப்பட்டன. இங்கு, துணை இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டது. இதன், அலுவலகம் ஊட்டியில் செயல்பட்டு வந்தது. வன ஊழியர்கள், மசினகுடி மக்கள் ஊட்டியில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று வர பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதனால், 'ஊட்டியில் செயல்பட்டு வரும் துணை இயக்குனர் அலுவலகத்தை மசினகுடிக்கு மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தினர். அதனை ஏற்று, துணை இயக்குனர் அலுவலகம் மசினகுடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'துணை இயக்குனர் அலுவலகத்தை, மசினகுடிக்கு மாற்றியதை வரவேற்கிறோம். பொது மக்களை அதிகாரிகள் சந்தித்து இங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
30-Jan-2025
24-Jan-2025