உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மருத்துவ கல்லுாரியில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள்

ஊட்டி மருத்துவ கல்லுாரியில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள்

ஊட்டி ; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் கன மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனம், நோயாளிகளை அழைத்து வரும் தனியார் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கனமழை பெய்தால் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் மேலும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் உடைந்த நடைபாதை, கற்கள் பெயர்ந்த சாலையால் இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவ துறை சார்பில், 'இடிந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என , மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில், மருத்துவமனையை ஒட்டி இடிந்து விழுந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி; வெளிநோயாளிகள் வந்து செல்லும் பகுதியில் சாலை வசதி; நடைப்பாதை வசதி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை