மேலும் செய்திகள்
மலை ரயில் இன்ஜினில் புகுந்த பாம்பு
05-Apr-2026
குன்னுார்: குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் டீசல் இன்ஜினில் பழுது பணிகள் முடிந்து குன்னுாருக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டது. குன்னுார்- ஊட்டி இடையே டீசல் இன்ஜின்கள் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழுது பார்ப்பு பணிக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு டீசல் இன்ஜின் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டது. பழுதுபார்க்கப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வந்த இந்த இன்ஜின் இரு பெட்டிகளின் நடுவே இணைத்து, குன்னுாருக்கு கொண்டுவரப்பட்டது. இந்த இன்ஜினில் சோதனை ஓட்டம் நடத்திய பின், தற்போது, ஊட்டி- குன்னுார் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
05-Apr-2026