மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று
24-Jan-2025
குன்னுார் ; குன்னுார் அரசு மருத்துவமனை சாலையில் கழிவுநீர் செல்வதால், மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.குன்னுார் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக, கழிவுநீர் நுழைவாயில் பகுதியில் ஓடுகிறது. இதற்கு தீர்வு காணாமல் விடப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எஸ்டேட் பகுதிகளில் இருந்து வரும் ஏழை தொழிலாளர்கள் உட்பட நோயாளிகள் இதனை மிதித்து மருத்துவமனைக்கு நடந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு வந்த உமாராணி கூறுகையில்,''அத்தியாவசிய சுகாதார பணியான, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கப்படாமல் உள்ளது. எனவே, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
24-Jan-2025