மேலும் செய்திகள்
யானைக்கால் நோயாளிகளுக்கு பயிற்சி
06-Feb-2025
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த அரசு அதிகாரிகளுக்கு பேரிடர் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், பேரிடரின் போது, எவ்வாறு உபகரணங்களை பயன்படுத்துவது, உயிர் சேதம் மற்றும் பொருட்சேதத்தை தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டது.மீட்புபடை உதவி கமாண்டென்ட் முத்து கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த அரசு அதிகாரிகளுக்கு, பயிற்சி முகாம் ஒரு வாரமாக நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று(நேற்று) பயிற்சி வகுப்பு நடந்தது. அது சம்பந்தமாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேலாக தங்கி பயிற்சி பெற்று வரும் மீட்பு படையினரிடம், விலை உயர்ந்த நவீன உபகரணங்கள் உள்ளன. ஊட்டி அடிக்கடி மழை பெய்து நில சரிவு, மரம் விழுந்து சாலை துண்டித்து போக்குவரத்து பாதிப்பை சந்திக்க கூடிய இடமாக உள்ளது. இதனால், மாநில அரசு படையை தங்க வைத்து, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வரும் தென்மேற்கு பருவ மழை உட்பட, மழையின் போது, பேரிடரை சந்திக்க தயாராக உள்ளனர். அதில், கட்டட இடிபாடு, வெள்ள பெருக்கு, அணுக்கதிர் வேதி பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் ஏற்படும் விபரீதங்களை தடுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு சமமான உபகரணங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, பழநி, கோவை உட்பட, 6 கம்பெனிகளில், 18 குழுக்கள் இயங்குகின்றன.கடந்த இரு ஆண்டுகளில் பேரிடரின் போது, உயிர் சேதம் இல்லாமல் மிக வேகமாக பணிபுரிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்றதுடன், உபகரணங்களில் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.
06-Feb-2025