உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர பகுதியை சமன் செய்யாததால் இடையூறு

சாலையோர பகுதியை சமன் செய்யாததால் இடையூறு

கோத்தகிரி; கோத்தகிரி பங்களோரை பகுதியில், சாலையோர குழியை சமம் செய்யாததால் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி கட்டப்பட்டு - கக்குச்சி வழித்தடத்தில், பங்களோரை பகுதியில், சாலை விரிவுப்படுத்தப்பட்டது. நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ள இச்சாலையில், நாள்தோறும் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை, 'ஒர்க் ஷாப்' உட்பட குடியிருப்புகள் நிறைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாலை சீரமைக்கப்பட்டதை அடுத்து, சாலையோரத்தில் கான்ரீட் போடப்படாமல் உள்ளதால், சாலை மட்டத்தில் இருந்து, ஒன்றரை அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள், ஒதுங்க முடியாது நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதில் இடையூறு அதிகரித்துள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர், சாலையோரத்தில், கான்கிரீட் அல்லது மண் நிரப்பி சமம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை