மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
ஊட்டி:ஊட்டியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தில், கலெக்டர் அருணா பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.மாநில அரசு, மக்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்,' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் மாதந்தோறும், ஒரு வட்டத்தில், ஒரு நாள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன், மக்களின் குறைகளை கேட்டு, நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, ஊட்டி அருகே அமைந்துள்ள ஏக்குணி ஒன்றிய துவக்க பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறி தானும் உணவை உட்கொண்டார். தொடர்ந்து, மாவனல்லா பகுதியில், 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், 4.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் கழிவுநீர் கால்வாய், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிழல்கூரை பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொக்காபுரம் ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், கற்றல் திறன் மற்றும் பள்ளி வளாக சுகாதாரத்தையும் ஆய்வு செய்தார். இதனை அடுத்து, அரசு அலுவலர்களுடன், இத்திட்டத்தின் செயல்பாடுகள், கள ஆய்வின் விபரங்கள் குறித்து ஆலோசித்தார். நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவுசிக், உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Dec-2025