உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

குன்னுார்; குன்னுார், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மனமகிழ் கிளப் (சி.எப்.ஆர்.சி.), நீலகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், 2 நாட்கள் அருவங்காட்டில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சி.எப்.ஆர்.சி.,யை சேர்ந்த விமல் ஆரோக்கியநாதன், சஞ்சீவ்; ஆண்கள் இரட்டையரில் சாம்சன் டேவிட், மோகன்ராஜ் மற்றும் விமல் ஆரோக்கியநாதன், சஞ்சீவ், இடைநிலை ஒற்றையரில் அனுஷ்கா சிமோனா, அரவேணு விக்ரம் ஆகியோர் மோதினர்.பதக்கம் பெறாத ஒற்றையரில் குட்ஷெப்பர்டு இன்டர்நேஷனல் பள்ளி ஆரியமன் ஹர்லால்கா, கவிஷ் (சி.எப்.ஆர்.சி.,); 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் கவிஷ், கவுதம்; 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கவிஷ், நிபிஷ் ஆரோன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ரோகித் கிப்சன், வேந்தன் (கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி); 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆர்யமன் ஹர்லால்கா, ஆர்யமன் திரிபாதி, (குட்ஷெப்பர்டு); 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அனிருத் கேடியா, ராமானந்த் (குட்ஷெப்பர்டு) ஆகியோர் விளையாடினர்.11 வயதுக்கு உட்பட்ட சிறுமியரில் யாசிகா, தியா; 13 வயதுக்கு உட்பட்ட சிறுமியரில் யாசிகா, வினயா; 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் அனுஷ்கா சிமோனா, ஆண்ட்ரியா, நேஹா; 9 வயதிற்கு கீழ் பிரிவில் ரிஷி ஜெயன், ஆசிர் ராயன் ஆகியோர் மோதி முறையே இரு இடங்களை பெற்றனர்.நீலகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் சாய் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். செயலாளர் ஸ்ரீ லுாபோ, துணை தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தனர். அதில், முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இணை செயலாளர் பாலசுப்ரமணியம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சார்லஸ், ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்று ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை