மேலும் செய்திகள்
தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
12-Mar-2025
கோத்தகிரி: கோத்தகிரியில் தி.மு.க., இளைஞரணி சார்பில், மும்மொழி கல்வி கொள்கையை எதிர்த்து, பொது கூட்டம் நடந்தது.இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பத்மநாதன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் மற்றும் பீமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் ராஜூ மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர், மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கையை எதிர்த்து பேசினர். இதில், மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் ரங்கராஜ் மற்றும் வீரபத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Mar-2025