ஏழு வயது சிறுவனை குதறிய நாய்: ஒன்பது தையலிட்டு தீவிர சிகிச்சை
குன்னுார்: குன்னுார் அருகே ஆரோக்கியபுரம் பகுதியில், 7 வயது சிறுவனை நாய் கடித்து குதறியதால், 9 தையல் போடப்பட்டுள்ளது.குன்னுார் வெலிங்டன், அருகே ஆரோக்கிய புரத்தை சேர்ந்த டிரைவர் மைக்கேல் என்பவரின், 7 வயது மகன், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று இவரை கடித்து குதறியுள்ளது.இதில், கை, கால், வயிறு என பல இடங்களிலும் காயமடைந்த நிலையில், குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு 9 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் டென்ட்ஹில் பகுதியில் குழந்தையையும், ஒசட்டி பகுதியில் நர்ஸ் ஒருவரையும் தெரு நாய்கள் கடித்தன. மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக, தெரு நாய்கள் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களும் தெருவில் விடுவதால் மக்களை விரட்டி கடிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கான கமிட்டி அமைத்து தீர்வு காண வேண்டும்,' என்றனர்.