மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
குன்னுார்; குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாய்களை வேட்டையாட சிறுத்தைகள் இரவு நேரத்தில் வந்து செல்கிறது.கடந்த, 20ம் தேதி வெலிங்டன் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாட சிறுத்தை வந்தது. அப்போது, சிறுத்தையிடம் சிக்கிய நாய் எதிர் தாக்குதல் நடத்தி போராடி தப்பித்தது. இந்த காட்சி 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.வனத்துறையினர் கூறுகையில்,'இரவு நேரங்களில் வரும் சிறுத்தை நாய்களை ஒரு முறை வேட்டையாடி கிடைக்காவிட்டால் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனினும், சிறுத்தை சப்தம் கேட்டால் வீட்டை விட்டு வெளியேறாமல், 'லைட் ஆன்' செய்து வீட்டிற்குள் இருந்தே சப்தம் எழுப்ப வேண்டும். அப்போது சிறுத்தை ஓட்டம் பிடிக்கும். வளர்ப்பு நாய்களை வெளியில், விடாமல் வீட்டிற்குள் பத்திரமாக வைக்க வேண்டும்,'' என்றனர்.
10-Dec-2024
03-Dec-2024