மேலும் செய்திகள்
ஊட்டி சீசனுக்காக மூன்று சுற்று பஸ்கள் இயக்கம்
19-Apr-2025
ஊட்டி ; ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களும் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.ஊட்டி நகரில் மூலை முடுக்கெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை , முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது. இவை, தெருவில் திடீரென விரட்டுவதால் , குழந்தைகள் , பெரியவர்கள், பெண்கள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.குறிப்பாக , இரவு பணி முடிந்து வீடு திரும்புவோர் , அதிகாலையில் நடை பயிற்சி , பேப்பர் போடும் நபர்கள் என , பலதரப்பட்ட மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.ஒவ்வொரு தெருவிலும் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. சிலர் வீட்டில் வளர்க்க முடியாத தெரு நாய்களை தெருவில் விடுகின்றனர். அவற்றை தெரு நாய்கள் தங்கள் கூட்டத்தில் சேர விடுவதில்லை.ஊட்டி நகராட்சி பகுதியில் கமர்சியல் சாலை , காபி ஹவுஸ் சந்திப்பு , ஏ.டி.சி. பஸ் ஸ்டாப் , மத்திய பஸ் ஸ்டாண்ட் , லோயர் பஜார் , அப்பர் பஜார் , ஸ்டேட் பேங்க் செல்லும் சாலைகளில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன.சமூக ஆர்வலர்கள் கூறுகையில் , 'தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு தனியார் அமைப்புடன் இணைந்து தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
19-Apr-2025