உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வரையாடு கணக்கெடுப்பு: ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

வரையாடு கணக்கெடுப்பு: ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

கூடலுார் ; நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்து, கூடலுார் வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக வரையாடுகள் உள்ளது. இதன் வாழ்விடங்கள் சுருங்கி, அழிவின் விளிம்பில் உள்ளதால் இதனை பாதுகாக்க, மாநில அரசு நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தை, 2022 முதல் செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள், 24ல் துவங்கி, 4 நாட்கள் நடக்கிறது. இப்பணியில் ஈடுபடும் முக்கூர்த்தி, நீலகிரி வன கோட்ட ஊழியர்களுக்கான பயிற்சி முகாம், நீலகிரி தெற்கு வனச்சரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.கூடலுார், ஓவேலி வனச்சரக ஊழியர்களுக்கான பயிற்சி முகாம், கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா அமையத்தில் நேற்று நடந்தது. பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள்மொழிவர்மன் தலைமை வகித்தார். ஓவேலி வனசரகர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.நீலகிரி வரையாடு திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளர் மணிகண்டன், 'வரையாடுகளை நேரடி, மறைமுக கணக்கெடுப்பு குறித்தும், அவைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பிரச்னைகளை கண்டறிவது, வாழ்விடங்களில் வரையாடுகள் மற்றும் மாமிச உண்ணிகளின் எச்சம் சேகரிக்கும் முறைகள்,' குறித்து விளக்கினார்.வனத்துறையினர் கூறுகையில்,' நீலகிரியில்,16 பிளாக்குகளில் நடக்கும் வரையாடு கணக்கெடுப்பு பணியில், 70க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை