மேலும் செய்திகள்
மண்டல இயக்குனர் ஆய்வு
06-Dec-2024
கூடலுார் : கூடலுார் நகராட்சிக்கான, 'சிக் மாயாறு' குடிநீர் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் நகராட்சிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.கூடலுார் நகராட்சி பகுதிக்கு, ஹெலன், இரும்புபாலம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் 'சப்ளை' செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தொரப்பள்ளி அருகே, சிக்மாயாறு பகுதியில், குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அப்பகுதியை, நகராட்சிகள் கூடுதல் இயக்குனர் விஜயகுமார், மண்டல இயக்குனர் இளங்கோவன் ஆய்வு செய்தனர். அப்பகுதியில், குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.தொடர்ந்து, கூடலுார் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கி வரும் ஹெலன், குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில், தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டி, குடிநீர் வினியோக குழாய்கள் பராமரிப்பின்றி சேதம் அடைந்து குடிநீர் வீணாகுவது தெரிய வந்தது. அவைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.ஆய்வின் போது, நகராட்சி தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி பொறியாளர் சாந்தி, கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
06-Dec-2024