உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி

டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி

குன்னுார்; குன்னுாரில் பயணிகளை இறக்கி விட்டு, ஆட்டோ ஓட்டி வந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்ட டிரைவர் வாகனத்தை நிறுத்த முயன்றும் முடியாமல், அவர் மீது ஆட்டோ சாய்ந்து பலியானார்.குன்னுார் பரசுராம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாட்சா. 66. அரசு போக்குவரத்து கழக டிரைவராக இருந்த இவர் ஓய்வு பெற்ற பிறகு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மாலையில், ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்று, நான்சச் பகுதியில் இறக்கி விட்டு திரும்பியுள்ளார். கிளண்டேல் அருகே வரும் போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் நிறுத்த முயன்றுள்ளார். எனினும், கீழே விழுந்த அவர் மீது ஆட்டோ சாய்ந்துள்ளது. அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலென்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்த போது, இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. கொலக்கம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ