மேலும் செய்திகள்
மரத்தில் பைக் மோதி ஐ.டி., ஊழியர் பலி
23-May-2025
தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்
15-May-2025
பாலக்காடு, : பாலக்காடு அருகே, காட்டுப்பன்றி குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்தவர் உயிரிழந்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், முதுதலை வடக்குமுறி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செய்தாலிக்குட்டி, 63. இவர், கடந்த 19ம் தேதி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கோடு பகுதிக்கு ஆட்டோ வாடகைக்கு சென்றிருந்தார்.அங்கிருந்து திரும்பி வரும் வழியில், திடீரென காட்டுப்பன்றி குறுக்கே சென்றதால், ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. படுகாயமடைந்த செய்தாலிக்குட்டியை, அப் பகுதி மக்கள் மீட்டு, பெரிந்தல்மண்ணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
23-May-2025
15-May-2025