உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடல் நலம் பாதித்த நிலையில் பயணிகள் உயிரை காத்த டிரைவர்

உடல் நலம் பாதித்த நிலையில் பயணிகள் உயிரை காத்த டிரைவர்

பந்தலுார்; கூடலுாரில் இருந்து சேரம்பாடிக்கு நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் சென்றது. அப்போது, பஸ் டிரைவர் மது,45, என்பவருக்கு சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரித்தது. இதனால், தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில், பந்தலுார் பஜார் பகுதிக்கு பஸ்சை ஓட்டி வந்தார். பஜாரில் பஸ்சை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போக்குவரத்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சலீம் என்பவரை மாற்று டிரைவராக நியமித்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட டிரைவரையும் பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் பஸ்சில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பஸ்சை நிறுத்தி, சிகிச்சை பெற்ற டிரைவருக்கு, பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை