உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லாறு சோதனை சாவடியில் நாள்தோறும் பயணிகள் சிரமம்: டிரைவர்கள் புகார்

கல்லாறு சோதனை சாவடியில் நாள்தோறும் பயணிகள் சிரமம்: டிரைவர்கள் புகார்

குன்னுார், ; நீலகிரி மாவட்டத்தில் வரும் வாகனங்களுக்கு இ--பாஸ் நடைமுறையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'பாஸ்ட் டேக்' அமைத்து வாகனங்களுக்கு, பசுமை வரியாக, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, புதிதாக டோல்கேட் அமைத்து, வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிக்கப்படுகிறது.அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி வாகனங்களுக்கு என, 'டி.என்.,43' என்ற வழியில், நீலகிரி வாகனங்கள் செல்லவும், இ--பாஸ் பெற்று செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழி எனவும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், பல்வேறு காரணங்களை காட்டி, 'டி.என்.43' செல்லும் வழி, 'பேரிகாட்' வைத்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் வாகனங்களும், இ--பாஸ் பெற்று வரும் வாகனங்களுடன் ஒரே வழியில் நீலகிரிக்கு அனுமதிக்கப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கின்றன.இது மட்டுமின்றி இங்கு சமவெளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு வழியில் மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் பழுதடைவதுடன், பல்வேறு சிரமங்களும் ஏற்படுகிறது. இது குறித்து புகார்கள் தெரிவித்தும் தீர்வு இல்லை.உள்ளூர் டிரைவர்கள் கூறுகையில்,''ஆண்டிற்கு, 756 ரூபாய் கிரீன் வரி கட்டிய போதும், வெளியூர் பதிவெண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு, 30 ரூபாயை தனியாக இங்குள்ளவர்கள் கட்டாயப்படுத்தி வசூலிப்பதை தடுக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள் வருவதற்கு, 'டி.என்-43' வழியில் வைத்த பேரிகாட் அகற்றி வாகனங்கள் அனுமதிக்க வேண்டும். ''என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை