உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 24 லட்சம் மதிப்பிலான போதை பொருள் கடத்தியவர் கைது

ரூ. 24 லட்சம் மதிப்பிலான போதை பொருள் கடத்தியவர் கைது

கூடலுார்: கூடலுார் வழியாக கர்நாடகாவில் இருந்து, கேரளாவுக்கு எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் வழியாக, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கேரளாவுக்கு போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் இரவு தொரப்பள்ளி வனச் சோதனை சாவடி வாகன சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பெங்களூரில் இருந்து, கேரள மாநிலம் செல்லும் அரசு பஸ்சை சோதனை செய்தனர்.அப்போது, கேரளா பாண்டிக்காடு மேலாட்டு பகுதியை சேர்ந்த முகமது சபீர், 32, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து எம்.டி.எம்.ஏ., என்ற விலை உயர்ந்த, 600 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட, அவரை கூடலுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போலீசார் கூறுகையில்,'பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருளின் மதிப்பு, 24 லட்சம் ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்டவர், கூடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம். அவரை, 10ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, 10ம் தேதி கோவையில் உள்ள போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ