தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய போதை வஸ்து
குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் கடத்தி வந்த போதை வஸ்தை பறிமுதல் செய்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குன்னுார் பர்லியார் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்த போது, 3.74 கிலோ போதை வஸ்து இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அதனை எடுத்து வந்தவர் அருவங்காடு எம்.ஜி., காலனியை சேர்ந்த ஷிபு என்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.