உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இ -பாஸ்; வாட்டர் ஏ.டி.எம்., செயல்பாடுகள் ஐகோர்ட் சிறப்பு வக்கீல் ஆய்வு

இ -பாஸ்; வாட்டர் ஏ.டி.எம்., செயல்பாடுகள் ஐகோர்ட் சிறப்பு வக்கீல் ஆய்வு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-பாஸ் முறை மற்றும் வாட்டர் ஏ.டி.எம்., இயக்கம் ஆகியவை குறித்து, ஐகோர்ட் சிறப்பு வக்கீல் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் நடைமுறை படுத்தப்படும் இ--பாஸ்; தடை படுத்தப்பட்டுள்ள 'பிளாஸ்டிக்' பொருட்கள்; வாட்டர் ஏ.டி.எம்., இயக்கம்; சாலை பராமரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.ஐகோர்ட் வக்கீல் மோகன் தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'பிளாஸ்டிக்' ஒழிப்பு முழுமையாக செயல்படுத்துவது; வாட்டர் ஏ.டி.எம்., பராமரிப்பு தொடர்பாக விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இ-பாஸ் முறையை சிறப்பாக செயல்படுத்த காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மகளிர் திட்டம் அலுவலர்கள் ஒருங்கிணைந்து இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வக்கீல் மோகன் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர் பிங்கர் போஸ்ட், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.,செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் காசிநாதன், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ