உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நள்ளிரவு பெய்த மழையில் இடிந்து விழுந்த கூரை வீடு: தப்பிய முதியவர்

நள்ளிரவு பெய்த மழையில் இடிந்து விழுந்த கூரை வீடு: தப்பிய முதியவர்

கூடலுார்; கூடலுார் ஓவேலி சூண்டி பகுதியில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் போது, வீடு சேதமடைந்த சம்பவத்தில் முதியவர் உயிர் தப்பினார்.ஊட்டி, கூடலுார், பந்தலுார், தேவாலா, நடுவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சாலையோர மரங்கள், சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில பகுதிகளில், மழையின் போது வீடுகளில் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் இடிந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஓவேலி பகுதியில், பலத்த மழை பெய்தது. அதில், சின்ன சூண்டி பகுதியில் குழந்தைவேலு, 65, என்பவரின் வீட்டின் மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் இடிந்து சேதமடைந்தது. வீட்டில் உறக்கத்திலிருந்த குழந்தைவேலு வீடு இடிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சம்பவத்தில் அவர் காயம் இன்றி உயிர் தப்பினார். சேதமடைந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் ஆய்வு செய்தார். மக்கள் கூறுகையில், 'முதியவரின் வீடு இடிந்ததால் இலவச தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை